கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் பகுதியில் ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 1 அலுவலகம் மற்றும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் 2 அலுவலகம் மொத்தம் 5 கோடி மதிப்பேட்டில் இரண்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ரிப்பன் மற்றும் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

முன்னதாக வருகை தந்த செந்தில் பாலாஜிக்கு ஏராளமான பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா, மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
