செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்
கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையின் பக்கிங் காம் கால்வாய் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கூடுதல் இயக்குநர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) ஆகியோரல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய உதவி பொறியாளர், ஒன்றிய பணிமேற்பார்வையாளர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.மேலும் ஏரியில் குப்பை / கழிவு நீர் கொட்டக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அத்து மீறி குப்பை போடுபவர் மீது கடும் அபராதம் வசுலிக்கப்படும் எனவும் கழிவு நீர் விடும் லாரி பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
மேலும் மெட்ரோ பணிகள் நடைபெறுவாதல் அவ்விடத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்ற கோரி கூடுதல் ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. மேற்காணும் இடத்தினை சுத்தம் செய்யப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.