தமிழ் இசை கருவிகளில்கஞ்சிராவை கண்டுபிடித்து தமிழ் இசைக்கு புத்துயிர் வழங்கிய தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தமிழ் இசை துறையில் மறக்க முடியாத நபர் ஆவார். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் புதுக்கோட்டை அடப்பன் வயர் பகுதியில் அமைந்துள்ளது.

பொதுவாக தமிழ் இசை படித்தவர்கள் அரங்கேற்றம் செய்வதற்கு முன்பாக தஷ்ணாமூர்த்தி பிள்ளை ஜீவசமாதி அடைந்துள்ள இடத்தில் இசை கச்சேரியை நடத்துவது வழக்கம் இக்கச்சேரியை நடத்திய பிறகு தாங்கள் பயின்ற இசையை அரங்கேற்றம் செய்வார்கள். அந்த வகையில் இன்று தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி அடைந்த இடத்தில் அமெரிக்கா நாட்டில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் வேணுபுரி சீனிவாசா என்பவர் இசைப்பழகி நடத்தி வருகிறார்.
இப்பள்ளியில் பயிலும் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தியாவில் சென்னை கேரளா ஹைதராபாத் மும்பை ஆகிய இடங்களில் அரங்கேற்றம் நடத்துவது வழக்கம் அரங்கேற்றம் செய்வதற்காக தட்சிணாமூர்த்தி பிள்ளை ஜீவசமாதி அடைந்த இடத்தில் இன்று தாங்கள் பயின்ற இசையை பாடி இசையமைத்து நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேலுபுரி சீனிவாசா என்பவர் இதுபோன்ற இசை கட்சியை நடத்துவது தங்களுக்கு பெருமையாக இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் வந்து தங்களுடைய மாணவ மாணவிகள் இசையை வாசித்து பின்பு அரங்கேற்றம் செய்வார்கள் என பெருமையோடு தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழ் இசையை சிறப்பாக பாடியும் இசையமைத்தது அப்பகுதி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.