புதுச்சேரி மண்ணாடிபட்டில் இலவச மருத்துவ முகாமில் அமைச்சர் நமச்சிவாயம் ரூ.35,000 நன்கொடையாக வழங்கினார்.
முகாமை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு PMSMA ஸ்கேன் மையத்தையும் திறந்து வைத்தார்.
சிறப்பு அம்சமாக, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுக்காக ரூ.35,000 நிதியை தன்னுடைய சொந்த செலவில் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி, மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.