குமரியில் தமிழக காவல்துறையினர் வசதிக்காக விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.120.00 மட்டுமே.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் காவலர் குடும்பத்தோடு தங்குவதற்கு ஒரு சிறப்பான வசதி. கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில்
13 அறைகள் கொண்ட சுற்றுலா விடுதியை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் பங்கேற்றார்.
51 லட்ச ரூபாய் செலவில் இந்த காவல்துறையினருக்கான விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
இதுல என்ன ஸ்பெஷல் ? ஒரு நாளைக்கு just 120 ரூவா தான் வாடகை மட்டுமே.