மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜக சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:
இன்றைக்கு நடக்கவிருக்கும் உலக மக்கள் மாநாடு இந்துக்களின் எழுச்சிக்காக கடவுள் மறுப்பு காட்டுமிராண்டிகளை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கும் அற்புதமான மாநாடு.

இதில் இஸ்லாமியர்கள் ஆன நாங்கள் வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான இந்து சொந்தங்களை, தொப்புள்கொடி உறவுகளை வரவேற்று அவர்களுக்கு குளிர்பான ஏற்பாடுகள் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு பாஜக சிறுபான்மையினராணி சார்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம்.
திரளான இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இங்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களை இந்து அறநெறியை பின்பற்றக்கூடிய உறவுகளை வரவேற்பதற்கும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது சிறுபான்மையினர் மக்களை அச்சுறுத்துவதற்காக நடைபெறுகிறது என்கிற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதும் அமீர் போன்ற நடிகர்களையும், திருமாவளவன் போன்ற இந்து மக்களுக்கு எதிரான தீய சக்திகளையும் ஒன்றிணைத்து இஸ்லாமியர்களை பாதுகாக்க போகிறோம் என்கிற போலி வேஷத்தை திமுக ஆட்சியை நடத்துகிறது.
உண்மையாகவே இந்த நல்லிணக்க மாநாடு என்பது தொடர்ந்து இந்து மக்களை வஞ்சித்து வரக்கூடிய கடவுள் மறுப்பு காட்டுமிராண்டி கொள்கை உடைய திமுக உச்சியை அகற்றுவதற்காகவும் ஆன்மீகத்தை நிலை நாட்டுவதற்காகவும். ஜாதி மத பேதம் இன்றி பாரத தாயின் பிள்ளைகளாக இணைவோம் என்கிற ஒற்றை கோசம் தான் இந்த மாநாடு. தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை ஸ்ரீ கந்தர் மலையை சிக்கந்தர் மலையை இஸ்லாமியர்களை தேவையற்ற முறையில் தூண்டிவிட்டு மத அடிப்படை விவாதத்தின் நூற்றுக்கண்ணாக சில இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்களை தூண்டிவிட்டு இந்துக்களை நம்பிக்கையை சிதைக்க முயலும் திமுகவிற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
முருகர் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறோம் இந்த மாநாட்டில் ஏராளமான இஸ்லாமியர்கள் இந்துக்கள் பங்கேற்கிறார்கள். முருகர் மாநாட்டில் கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன வேலை என கேள்வி எழலாம் ஆனால் நாங்கள் என்றும் மத வழிபாட்டின் முறையில் வெவ்வேறாக இருந்தாலும் எங்களுடைய முப்பாட்டன் முருகனைத் தான் வழங்கி இருக்கிறோம் நாங்கள் அரபு பிரதேசமும், ஆப்கானிஸ்தான் இருந்து வந்தவர்கள் அல்ல பாபருக்கும் அவுரங்கசீப்க்கும் பிள்ளைகள் அல்ல எங்கள் முன்னோர்கள் கந்தசாமியாகவோ ராமசாமி ஆகவோ தான் இருந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணின் பூர்வ கொடியான நாங்கள் எங்களின் மூதாதையர்கள் யாரை வழிபட்டார்கள் அந்த வழிபாட்டு சிதைக்கப்படுவதை இந்த திமுக ஆட்சி முன்னிறுத்தினால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்கள் மூதாதையர் வழிபாட்டு உரிமைகளை ஒருங்கிணைந்து குரல் கொடுத்து மீட்டெடுப்போம் என்பதற்காகத்தான் அனைவரும் பங்கேற்கிறோம்.
தமிழக அரசியல் வரலாற்றில் இந்த மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும்.
திமுகவை பொறுத்தவரை இதை அரசியல் மாநாடு என சொல்கிறார்கள் அவர்கள் அப்படி கருதினால் 2026 இந்த முருகன் மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படும் என அவர்கள் ஆசைப்பட்டால் அது உண்மையாக வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
.
ஆன்மீகம் என்பது அரசியலின் வழிகாட்டுக்கு உதவும் என்பதை நாம் புரிந்து இருக்கிறோம் எனவே இந்த மாநாடு செயலுக்கு வழிகாட்டி அற்பர்களை வெளியேற்றி கடவுள் பக்தி உள்ளவர்களை மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு கொண்டு வரும். நாங்கள் வரவேற்கிறோம் எனக் கூறினார்.
வேலூர் இப்ராஹிமுக்கு மதுரை விமான நிலையத்தில் நித்யானந்தா சீடர்கள் சார்பாக புத்தகம் வழங்கி சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.