புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை நிறைய திரட்டி வைத்துள்ளோம், வருகிற 26ம் தேதி நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த நாராயணசாமி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு 2026-ல் ஊழல் செய்யும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நிச்சயம் சிறையில் தள்ளுவோம் என உறுதிப்பட தெரிவித்தார்.

ஊழலால் மலிந்துள்ள என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா என்ற சூழல் உருவாகி உள்ளது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து பாஜக-ஆர்எஸ்எஸ் செய்யும் அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது என்று விமர்சித்த நாராயணசாமி 2026-ல் தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங் தலைமையிலும் ஆட்சி அமையும் என்றார்.
வருகின்ற தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கிறார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் கூட்டணி குறித்தும் போட்டியிடும் இடங்கள் குறித்தும் முடிவு செய்ய வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.