கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உள்ள குளத்துப்பாளையம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மணல் சலிப்பகத்தில் நேற்று இரவு சட்டவிரோதமாக காவிரி ஆற்றிலிருந்து கடத்தி வரப்பட்ட மணல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளியணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையிட்டதில் நான்கு லாரிகள் மணல் லோடுடன் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆய்வாளர் முத்துக்குமார் லாரி டிரைவர்கள் சதீஷ்குமார், பிரகாஷ், பாரதி, சதீஷ்குமார் மற்றும் மணல் சலிப்பகத்தின் உரிமையாளர் தயாநிதி
உட்பட 5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஆற்று மணல் எங்கிருந்து எடுத்துவரப்பட்டது. லாரிகளின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.