திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்தவர் சாகுல் மகன் நஸ்ருதீன் (வயது 45). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இவர் வீட்டிற்குள் இருந்தபோது திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றிய எரிய தொடங்கியுள்ளது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். பதறியபடி வீட்டிற்கு வெளியே வந்த நஸ்ருதீன் சிறிது நேரம் செய்வது அறியாது திகைத்து நின்றவர் பின்னர் குடங்களிலும் வாழிகளிலும் இருந்த தண்ணீரைக் கொண்டு பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியது.
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.