• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உண்டியலை உடைத்து ஒரு லட்ச ரூபாய் திருட்டு..,

ByArul Krishnan

Jun 20, 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோ.கொத்தனூர் கிராமத்தில் கருப்பையா மற்றும் தோனியப்பர் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் நேற்று மாலை வழக்கம் போல் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற மக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது இரண்டு கோயில்களிலும் இருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.

இதனை அடுத்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.