கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் பள்ளி விழிப்புணர்வு கூட்டம் 17-06-2025 இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், டி.டி மோட்டூர் ஊராட்சியில், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அமிலா, கிராம நிர்வாக அலுவலர்- நியோ ரோட்டக்ஸ் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மைதிலி, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், அங்கன்வாடி பணியாளர் சுகந்தி, கிராம சுகாதார செவிலியர் செவ்வந்தி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடப்பட்ட கருத்துக்கள்:-
குழந்தைகள் உரிமைகள் அன்புகரங்கள் திட்டம் குறித்து ஏடுத்துரைக்கப்பட்டது.
பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாது.
இடை இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்த்தல். பெண் சிசு கொலையை குறைத்து பெண் குழந்தை பாலின விகிதத்தை உயர்த்துதல். பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளியில் செல்வதை உறுதிப்படுத்துதல். தீண்டாமையை ஒழித்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துதல்.
தகுதி உள்ள குழந்தைகளை கண்டறிந்து நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற உதவி செய்தல். குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தை திருமணத்திற்கான வாழ்க்கை சூழல். குழந்தை திருமண தடைச் சட்டம்.
POCSO சட்டம். வளரிளம் பெண்கள் கர்ப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகள் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயுள்ள உறவு முறை. கைப்பேசியினால் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள்.குழந்தைகளுக்கான பாதுகாப்பு உதவி எண்-1098. பெண்களுக்கான உதவி எண்-181. போதைப் பொருள் விற்பனை தடுப்பு -10581
ஆகியற்றை குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தபட வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
