அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்,
சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில்.., டெய்லர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறேன் என்றும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதும் தெரிவித்தார்,
இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து குறித்து கேட்டதற்கு அது ஒரு துயரமான சம்பவம் இறைவன் அருளால் இப்படிப்பட்ட சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்து விட்டு, பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.