சென்னை தாம்பரம் அடுத்த சானடோரியம் ஜி.எஸ்.டி சாலை எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து இளைஞர் ஒருவர் அளப்பரியில் ஈடுபட்டதோடு மது வாங்கி கொடுத்தால் தான் சாலையிலிருந்து எழுந்து வருவேன் என கத்தி கொண்டிருந்தார்.

அப்பொழுது தாம்பரம் சானடோரியம் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரிடம் சென்று அன்பாக பேசி சாலையில் இருந்து எழுந்து வரும்படி கூறியதும் அதைகேட்டு ஆக்ரோஷம் அடைந்த அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலையில் இருந்து வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
போலீசார் பாணியில் அந்த நபரை சாலையிலிருந்து அப்புறப்படுத்த முற்ப்பபட்டனர் அந்த நபர் வராததால் வலுக்கட்டாயமாக இழுத்து வந்ததால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த நபர் போலீசாரை தாக்க கீழே இருந்த கற்களை எடுத்ததும் நாலா பக்கமும் போலீசார் தெறித்து ஓடினர்.
அதைத்தொடர்ந்து அங்கு இருந்த பெண் போலீசார் உதையராணி என்பவர் போலீசாரை கற்களால் தாக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து அந்த நபர் நடத்திய ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை சமாதானம் செய்தனர்,

மேலும் அவரிடம் விசாரித்ததில் என் பெயரை கூட சொல்ல மாட்டேன் என கூறிய உள்ளார்,இதையடுத்து பிரச்சனை வேண்டாம் என எண்ணிய போலீசார் அவருக்கு சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்த பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
பரபரப்பாக இயங்கி வரும் சானடோரியம் ஜி.எஸ்.டி சாலையில் சாலையில் நடுவே அமர்ந்து ரகலையில் ஈடுபட்ட நபரை அப்புறப்படுத்த சென்ற போலீசாரை கற்களால் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.