இராஜபாளையம் சிஎஸ்ஐ சர்ச் மதபோதகர் ஜாதி பிரிவினையை தூண்டி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வில் முறைகேடு செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சிஎஸ்ஐ சர்ச் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது இந்த சிஎஸ்ஐ கிறிஸ்தவ சபையில் 1000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களும் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த கிறிஸ்தவ சபையில் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வில் தனக்கு வேண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை மட்டும் தேர்வு செய்ய திட்டமிட்டு அந்த பணிகளை செய்து முடித்ததாக போதகர் ஜான் கமலேசன் மீது கிறிஸ்தவ சபையில் வழிபாடு செய்து வரக்கூடிய உறுப்பினர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் பொழுது இந்த சிஎஸ்ஐ கிறிஸ்தவ சபையில் ஜாதியை கடந்து ஒற்றுமையாக சபை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஜான் கமலேசன் மத போதகராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் இவர் வந்த நாள் முதல் இங்குள்ள மக்களிடையே ஜாதி பிரிவினையை தூண்டி செயல்பட்டு வருகிறார் மேலும் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்வதற்கு குறிப்பிட்ட நான்கு குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் தேர்வு செய்துள்ளார். மற்றவர்கள் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து அவர்களை புறக்கணித்துள்ளார்.
மேலும் கிறிஸ்துவ சபையில் உள்ள பணத்தை கையாடல் செய்து வருகிறார் இவர் மீது கிறிஸ்தவ சபை பிஷப் .மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இராஜபாளையம் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று உள்ளிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவரை மாற்ற வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் மத போதகர் ஜான் கமலேஷ் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறை இருவரிடமும் சமரசம் செய்தனர். இருப்பினும் மதப் போதகரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.