கோவில் திருப்பணிக்காக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி 60 ஆயிரம் நிதி உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்று சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் மக்கள் கூறியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கிச்சநாயக்கன்பட்டி கிராமம்.இந்த கிராமத்தின் கம்ம மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது திருப்பணி நடந்து வருவதால், கிச்சநாயக்கன்பட்டி பொதுமக்களும், கம்ம மகாஜன சங்கத்தில் உள்ள பெரியவர்களும் கோவில் திருப்பணிக்கு நிதி வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி இடம் கோரிக்கை வைத்தனர், இந்தக் கோரிக்கையை ஏற்ற முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கோவில் திருப்பணிக்காக ரூபாய் 60 ஆயிரத்தை வழங்கினார். நிதியைப் பெற்ற கம்ம மகாஜன சங்கத்தினரும், ஊர் பெரியவர்களும் நன்றியை தெரிவித்தனர்.








; ?>)
; ?>)
; ?>)