• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு

ByKalamegam Viswanathan

Jun 13, 2025

மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் தனியார் விடுதியில் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சை 2நாள் மாநாடு நடைபெற்றது.

எண்டோஸ்கோபிக் நவீன இதய அறுவை சிகிச்சை மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரிஸ்,உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உலகப் புகழ் பெற்ற மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்

மதுரை வேல்மாள் மருத்துவ கல்லூரி சார்பாக ஜூன் 13,14 ஆகிய 2 நாள் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நவீன எண்டோஸ் கோபிக் இதய அறுவை சிகிட்சை மாநாடு மதுரையில் நடைபெற்றது

இதய அறுவைச்சிகிச்சையில் மருத்துவ சாதனை நிகழ்வாகமுதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சை மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிட்சை நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

இத்தகைய எண்டோஸ்கோபிக் அறுவைச்சிகிச்சையில் உலக அளவில் நவீன தொழில் நுட்ப முன்னோடி மருத்துவ அறுவை நிபுணர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட 20 நாடுகளில் இருந்து மாநாட்டில் தங்கள் மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சையைச் செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ள 50 பேர் மட்டுமே உள்ளனர்,

அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்பிரசாத் ஆவார். இந்தியாவில் குறிப்பாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எண்டோஸ் கோபிக் இதய அறுவைச்சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறார்.

தெற்கு ஆசியா முழுவதும் இருந்து மருத்துவர்கள் 2 நாள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நவீன எண்டோஸ் கோபிக் இதய அறுவை சிகிட்சை யில் 2 அங்குலம் மட்டுமே வெட்டிச் செய்யப்படும் ‘ஓப்பன் ஹார்ட் சர்ஜரி’ முறையை கற்றுக்கொள்வதற்காக. இம்மாநாடு மூலம் புதிய அறுவை சிகிட்சை முறையில் குறைந்த காயச்சின்னம் கொண்ட, எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சையை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இந்த மாநாட்டை மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் இதயவியல் துறை இயக்குநர் டாக்டர் ராம்பிரசாத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு, மிக உயர்தர மருத்துவ கல்வி மேடையாக அமைந்தது.

“இந்த மாநாட்டின் மூலம் உலகளாவிய மருத்துவ ஒத்துழைப்பும், இதய அறுவைச்சிகிச்சை வளர்ச்சியின் வேகமான முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது” என டாக்டர் ராம்பிரசாத் கூறினார்.

“இத்தகைய சர்வதேச மருத்துவ மாநாடுகளின் மூலம் மதுரையில் இம்மாநாட்டை நடத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

வழங்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • அறுவைச்சிகிச்சை நேரடி செயல் விளக்கங்கள்
  • முக்கிய உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்
  • முழுமையாக எண்டோஸ்கோபிக் கொரோனரி ஆர்டரி பயபாஸ், வால்வு மாற்றம் மற்றும் பழுது திருத்தம், மற்றும் பிற இதயக்குற்றங்களை மூடியும் அறுவைச்சிகிச்சை முறைகள்

பங்கேற்ற முக்கிய பன்னாட்டு நிபுணர்கள்:

  • ப்ரொ. பாட்ரிக் பெரியர் (பிரான்ஸ்) – ECSC தலைவர் மற்றும் உலக புகழ்பெற்ற எண்டோஸ்கோபிக் மைட்ரல் வால்வு அறுவைசிகிச்சை நிபுணர்
  • டாக்டர் ஜோசப் சகரையாஸ் (UK) – ECSC செயலாளர், எண்டோஸ்கோபிக் கொரோனரி மற்றும் ஹைபிரிட் . நிபுணர்
  • டாக்டர் மார்கோ (இத்தாலி) – எண்டோஸ்கோபிக் ஆர்டிக் வால்வு அறுவைசிகிச்சையில் புதிய முறைகள் உருவாக்கியவர்
  • டாக்டர் ஏ. பிட்ஸிஸ் (கிரீஸ்) – பெரியோர் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கான இதயக் குறைபாடுகளுக்கான எண்டோஸ்கோபிக் அறுவைசிகிச்சையில் முன்னோடி

20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் (அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், UAE மற்றும் பலர்) கலந்துகொண்டு புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொண்டனர்

உலகப்புகழ்பெற்ற மருத்துவ மையங்களில் இருந்து நேரடியாக காணொளி காட்சிகள் மூலமாக ஒளிபரப்பப்பட்ட அறுவைச்சிகிச்சைகள், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மிகுந்த பயனளித்தன.

இந்த மாநாட்டின் வெற்றி, ஆசியாவில் இதய அறுவைச்சிகிச்சையில் ஒரு புதிய மருத்துவ சகாப்தத்தில் மைல் கல்லாக விளங்குகிறது.

இது ஒரு வருடாந்திர நிகழ்வாக மாற்றப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இது போல் சர்வதேச மருத்துவ கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய நாட்டில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வால் மதுரை இதய நோயில் நவீன மருத்துவ அறுவை சிகிட்சையை புதுமைகளில் மையமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மாறியுள்ளது.

இதய அறுவைசிகிட்சையில் குறைந்த காயச்சின்னம் கொண்ட, நோயாளி மையமாகக் கொண்ட இதய சிகிச்சை முறைகளை மேம்படுத்தும் உலகளாவிய மருத்து சிசிட்சை கலந்தாய்வில் ஒற்றுமையை இந்த மாநாடு உறுதி செய்துள்ளது.

புதிய எண்டோஸ்கோபிக் கார்டியாக் கருவி மூலம் இதுவரை 10,000 மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மருத்துவ கருத்தரங்கின் மூலம் ஆசிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு எண்டோஸ்கோபி கார்டியாக் சிகிச்சை தொடர்பானமருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது