• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025

BySeenu

Jun 13, 2025

கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது. இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில் 54-வது கண்காட்சி நடைபெறவுள்ளது.

கோவை நகரில் நடக்கும் இந்த ஆசிய நகை கண்காட்சி, மிகவும் நுண்ணிய வகை சார்ந்தது. வரும் திருவிழாக் காலங்களுக்கும், திருமணங்களுக்கும் ஏற்ற நகைகளை வாங்க ஒரே இடமாக திகழ்கிறது. ஒரே இடத்தில் அரிய வகை கற்கள், வடிவமைப்புகள், இங்குள்ளன. தென்னிந்திய அளவில் உலகத்தரம் வாய்ந்த நகைகள் இடம் பெற்றுள்ளன.
சொகுசு வகை நகை கண்காட்சி வடிவமமைப்புகள் பெங்களுரு, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், சென்னை மற்றும் கோவையில் தயாரான நகைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து பிராண்ட்களின் நகைகள் சர்வதேச தரத்தில் இந்தியா முழுவதிலுமான நகைகள் இடம் பெற்றுள்ளன.

பெங்களுரு கஜராஜ், கிருஷ்ணய்யா செட்டி குழுமம், டில்லியை சேர்ந்த ஷேகல், ஷிரயன்ஸ் ஜூவல்ஸ், மும்பையை சேர்ந்த நேகா கிரியேஷன்ஸ், ரேணுகா பைன் ஜூவல்லரி, ஹவுஸ் ஆப் இபன்ஸ், டயமரன், ரே வேரா, பிரித்தம் ஜூவல்ஸ், பிடிஇசட் ஜூவல்ஸ், ஜீயனா ஜூவல்ஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன. கோவை கீர்த்திலால் காளிதாஸ், கற்பகம் ஜூவல்லர்ஸ், சென்னை அஞ்சலி, கிராண்டியுர், தி வெள்ளி ஷாப், பாலாஜி பியர்ல்ஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஜெய்ப்பூரை சேர்ந்த ஜெம்ஸ்ரஸ், எப்இசட் ஜெம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.