• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் கேட்டதால் உள்ளிருப்பு போராட்டம்..,

ByAnandakumar

Jun 13, 2025

கரூர் மாவட்டம்,குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனுமதி பெற்ற குளித்தலை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர் சார்பில் இன்று நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜன் கட்டிட அனுமதிக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் கேட்பதாகவும் இது குறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு கொடுத்தும் குறிப்பானையை கண்துடைப்பாக செயல்படுத்தி அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனருக்கும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக இன்று நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜனிடம் சந்தித்தபோது பொறியாளர்களை தர குறைவாக பேசி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம் என்று பேப்பரை முகத்தில் தூக்கி எறிந்து, மண்டல இயக்குனருக்கே நாங்க தான் பணம் தருகிறோம் என்று கூறியதாக கோவம் அடைந்த பொறியாளர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்று ஆய்வாளரை கண்டித்து காலை முதல் இரவு வரை நீதி கேட்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர், குளித்தலை காவல் துறை உதவி ஆய்வாளர் சரவணகிரி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ஏன தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.