• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி 3பேர் பலி..,

ByArul Krishnan

Jun 11, 2025

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நடைபாதை யாத்திரை சென்றனர்.

இந்த நிலையில் அவர்கள் விருத்தாசலம் சேலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து செல்லும் பொழுது அப்பொழுது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியதில் இருதயசாமி அவரது மகள் சகாயமேரி, ஸ்டெல்லா மேரி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி, ஆகிய நான்கு பேர் பலத்த காயம் ஏற்பட்டனர்.

பின்னர் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் காவல்துறையினருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆனந்தி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது கார் மோதி மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.