கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகள் பிரிவு நுழைவு வாயில் பகுதியில் ஜன்னல் கம்பியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக ஆணுறைகள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பெட்டியில் இருந்த ஆணுறையை அங்கு வந்த சிலர் எடுத்து பார்த்த போது, அந்த ஆணுறை பாக்கெட்டில் தயாரிப்பு தேதி 06/2022 என்றும், காலாவதி தேதி 05/2025 என்றும் குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக ஆணுறைகள் வைத்திருந்த பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
வேண்டாத கர்ப்பத்தை தவிர்க்கவும், பால்வினை மற்றும் எச்.ஐ.வி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ஆணுறை காலாவதியாகி இருந்த சம்பவம் அதன் பயன்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)