கோவையில் சர்வதேச அளவில் நடைபெற்ற பிரத்யேக ஒகினாவா கோஜூ கராத்தே பயிற்சி முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் பிரபலமான பாரம்பரிய தற்காப்பு கலையான ஒகினவா கோஜு ரியூ கராத்தே, முக்கிய பாணியாக கருதப்படுவதுடன், உலகம் முழுவதும் ஆர்வமுடன் பலர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் மும்பை,தெலுங்கானா,ஜார்க்கண்ட்போன்ற முக்கிய நகரங்களில் சர்வதேச கராத்தே பயிற்சியாளர்கள் ஒகினாவா கலை கராத்தே பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நான்காவது நகரமாக கோவையில் சர்வதேச ஒகினாவா கோஜு கராத்தே பயிற்சி முகாம் கெங்கோ மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில், சர்வதேச அளவில் பிரபலமான கராத்தே பயிற்சியாளர்கள் பெல்ஜியம் நாட்டில் இருந்து வந்து பயிற்சி எடுத்தனர்.
இதில் ஐந்து வயது முதல் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர்கள் வரை இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
இது குறித்து கராத்தே பயிற்சியாளர்கள் பிரமோஸ்,பார்த்திபன்,மற்றும் ராஜேஷ் ஆகியோர் கூறுகையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பெல்ஜியம் நாட்டில் இருந்து சர்வதேச பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு கட்டா மற்றும் குமித்தே சண்டை குறித்து பிரத்யேக நுணுக்கங்களை மாணவ,மாணவிகளுக்கு எடுத்து கூறி பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக ஆயுதங்கள் இல்லாமல் தங்களை தற்காத்து கொள்வதில் இந்த கலை முக்கிய பங்கு வகிப்பதாகவும்,பெண்கள் தற்போது இந்த பயிற்சிகளை ஆர்வமுடன் கற்று வருவதாக தெரிவித்தனர்.
இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு கராத்தே கலையின் கட்டா மற்றும் குமித்தே குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டனர்.