• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு..,

ByAnandakumar

Jun 9, 2025

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ரவி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்து மேல தாளங்கள் உடன் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மேடையில் பேசிய அவர்: 33 ஆண்டுகளாக விஜயகாந்த் நானும் அவர் வேற நான் வேற என்று வாழ்ந்தது கிடையாது சொல்,செயல் என்றும் ஒன்றாக இருந்தோம், அந்த மன ஒற்றுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம், வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மகத்தான வெற்றி பெறும், வருகின்ற 13ஆம் தேதி படைத்தலைவன் திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. அதில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்க்க வேண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தர வேண்டும் என கூறினார்.