கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவான நிலையில் ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையை கரூர் பேருந்து நிலையம் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கையாக வழங்கினார்.

கரூரில் உள்ள எம்பி அலுவலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவான நிலையில் ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையை இன்று வெளியிடுகிறேன்.
இதேபோன்று செயல்பாட்டா அறிக்கை ஒவ்வொரு ஆண்டு வெளியிடப்படும்.
இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்
முதலாவதாக கல்வி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு மட்டும் 57% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டு அறிக்கையில் 51% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் முழுவதுமே கல்விக்காக அதிகபட்ச தொகை நாடாளுமன்ற தொகுதியில் ஒதுக்கி உள்ளோம்.
கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை பகுதிகளில் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்துள்ளோம். இந்த கல்லூரிகளில் 11 வகையான பாடப்பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
01.06.2020 ஆம் ஆண்டு மண்மங்கலம் பகுதியில் மேம்பால பணிகளுக்காக அதிமுக தம்பிதுரை பேசத் தொடங்கிய நிலையில் அதிமுகவினர் பொய் சொல்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு மண்மங்கலம், விராலிமலை பகுதியில் மேம்பாலம் கட்டத் தேவையில்லை. ஒன்றிய அரசின் நிலைப்பாடு 2019 ஆம் ஆண்டிலிருந்து முயற்சிக்கு 2020 ஆம் ஆண்டு அதிமுகவினர் கட்ட சொல்லிய மேம்பாலம் ஒன்றிய அரசு கட்ட முடியாது என தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மத்திய அரசு விபத்து இல்லாத பகுதி என தெரிவித்தது.
புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் அதேபோன்று கரூரிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டு பேருமே பொய்யாக நாங்கள்தான் மத்திய அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தி மேம்பாலங்கள் கொண்டு வந்தோம் என்று சொல்வது தவறு என கூறினார்.
இந்நிலையில் தொடர் முயற்சியால் காவல்துறையினர் விபத்துக்கள் அப்பகுதியில் நடைபெறுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு கொண்டு வந்த பாலத்தை 2019 ஆம் ஆண்டு அதிமுக முயற்சியால் கொண்டு வந்தார்கள் என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.






; ?>)
; ?>)
; ?>)
