தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு காலை விடியல் உணவு வழங்கும் நிகழ்வை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமயம் தொகுதியில் 102- கிராம ஊராட்சி மக்களுக்கு 102 நாள் காலை விடியல் உணவு 500- நபருக்கு வழங்கும் நிகழ்வை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சார்பில் நடைபெற்று வருகிறது.
இதில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்கு தாளம்பட்டி என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி உணவு வழங்கினார்.
இதில் கோட்டூர் பேரையூர் என 500க்கும் மேற்பட்டோருக் ஆர்வமுடன் திமுக கழக நிர்வாகிகள் உணவு பரிமாறினார்கள் என்பது குறிப்பிடதக்கது.