நாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வது கிளை மாநாடு மற்றும் கட்சியின் நூற்றாண்டு விழா இன்று நடைப்பெற்றது.

ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற மாநாட்டு கொடியினை ஒன்றிய செயலாளர் எம்.காசிநாதன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மறைந்த மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டு மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டில் திருவாரூர், நாகையில் இருந்து காக்கழனி வழியாக கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும்.

காக்கழனி – மணலூர் சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள மயான கொட்டைகளை சீரமைக்க வேண்டும். ஊராட்சியில் உடனடியாக 100 நாள் வேலையை தொடங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.கே.நாகராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் மேகலா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.