மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும்.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தாலும் கோடை விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக வருடம் தோறும் கோடை விழா நடைபெறும்.
இந்த ஆண்டு கோடை விழா 62 ஆவது மலர் கண்காட்சியுடன் கடந்த 24 ஆம் தேதி துவங்கி மலர்கள் காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது தினம் தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வரக்கூடிய நிலையில் முக்கிய நிகழ்வாக இருக்கக்கூடிய படகு போட்டி மற்றும் படக அலங்கார போட்டி கொடைக்கானலில் வீசி வந்த பலத்த காற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாளையுடன் கோடை விழா முடிவு பெறுகிற நிலையில் இன்று கொடைக்கானலில் படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு படகு குழாமில் நடைபெற்ற இப்போட்டி நான்கு பிரிவுகளில் நடைபெற்றது இரட்டையர்கள், கலப்பு இரட்டையர்கள் , ஜோடிகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது மேலும் நான்கு பிரிவுகள் கீழ் நடைபெற்ற இ போட்டிகளில் பலரும் படகு போட்டியில் பங்கேற்றனர் மேலும் வழக்கமாக படகு செலுத்தும் படகோட்டி களுக்கும் போட்டிகள் நடைபெற்றது படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத் துறை சார்பாக பரிசுகளும் வழங்கப்பட்டது .

மேலும் படகு போட்டியில் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து படகு அலங்கார போட்டியும் இன்றே நடைபெற்று முடிந்தது படகு அலங்கார போட்டியில் பிரையன்ட் பூங்கா சார்பாக பூக்களால் ஆன மரம், மீன்வளத்துறை சார்பாக அரசின் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள், வருவாய் துறை சார்பாக அரசு திட்டங்கள் பட அலங்கார போட்டியில் கலந்து கொண்டது. மேலும் படகு போட்டி மற்றும் படக அலங்கார போட்டியில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களுடைய சுற்றுலாவை நிறைவேற்றம் செய்தனர்.
.