• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையில் உணவில் பல்லி இருந்த விவகாரம்..,

BySeenu

May 29, 2025

கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர் மாநகர காவல் ஆணையாளர்கள் புகார் அளித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ் புரம் அருகே இயங்கி வரும் கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று முன் தினம் பல்லி இருந்ததாக வீடியோ காட்சிகள் வெளியான விவகாரம் தொடர்பாக கடையின் உரிமையாளர் உமாபதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்த வேண்டுமென மனு அளித்தார்.

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உமாபதி அளித்த பேட்டியில் பல ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருவதாகவும் கடந்த 27ஆம் தேதி 4 பேர் எங்களது உணவகத்திற்கு சாப்பிட வந்ததாகவும் அப்போது உணவில் பல்லி இருந்ததாக எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்தார். அதில் ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்று விட்டனர் என்றார்.

இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பாக வீடியோக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் அளித்து பின்னர் உணவகத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறையினர் எங்கள் உணவகத்தை சோதனை செய்து 12 குற்றச்சாட்டுகளுடன் ஏழு நாட்களுக்கு கடையை திறக்க கூடாது என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்றும் எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை திருத்திக் கொண்டு கடையை மீண்டும் திறப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் உணவில் இருந்த பல்லி வேண்டுமென்றே திட்டமிட்டு உணவில் போட்டு இருப்பதாகவும் அது எங்களுடைய கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும், அந்த காட்சிகளுடன் புகார் அளித்துள்ளோம் என்றனர். இது தொடர்பாக பணம் கேட்டு யாரும் என்னிடம் பேசவில்லை, என கூறிய அவர் கடையின் பெயருக்கும், என் பெயருக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக செய்ததாக தோன்றுகிறது என்றார். மேலும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.