• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தகாத வார்த்தைகளால் திட்டிய காவலர்..,

BySeenu

May 29, 2025

கோவை, கெம்பட்டி காலனி பகுதியில் சேர்ந்த பிரசாந்த். இவர் ஆன்லைன் பொருள்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தி விட்டு நேற்று இரவு பீளமேடு பகுதியில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் வழியாக செம்பட்டி காலனியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவலர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் வந்த பிரசாந்தை பிடித்து, ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி உள்ளார். அசல் ஆவணங்கள் இல்லை என்றும், நகல் மட்டும் தான் உள்ளது என்றும் பிரசாந்த் காண்பித்து உள்ளார்.

இது வேண்டாம் அசல் ஆவணத்தை காண்பிக்குமாறு காவலர் கேட்டு உள்ளார். மேலும் அந்தக் காவலர் பிரசாந்தின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சென்று உள்ளார். இதுகுறித்து பிரசாந்த் கேள்வி எழுப்பியதால், ஆத்திரம் அடைந்த காவலர் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த இளைஞரின் செல்போனை அங்கு மழை நீர் தேங்கி இருந்த தண்ணீரில் தட்டி விட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் இதனை அந்த இளைஞர் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அதனை அந்த காவலர் செல்போனை பறிக்கும் முயன்ற போது அந்த இளைஞர் இவர் தான், என்னை அடித்தாரு, இவரைப் பார்த்துக்கோங்க, போனை உடைக்காதீங்க என காவலரிடம் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.