மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆனையூர் பகுதி மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் 5ம் ஆண்டு விழா ஆனையூர் பகுதி சங்கத்தின் தலைவர் சரவணன் செயலாளர் திலகராஜ் பொருளாளர் பூவலிங்கம் ஆகியோர் தலைமையில் மாநில தலைவர் முத்து மாநில செயலாளர் கம்பம் ராஜன் பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மருத்துவ சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் சங்கம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறுவர் சிறுமியர் குழந்தைகளுக்கான விளையாட்டு ஆடல் பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து பத்து பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் செயற்குழு தலைவர் கிரி இளைஞர் அணி தலைவர் வைரமுத்து மதுரை மாவட்ட தலைவர் குலகன் செயலாளர் ராஜகுரு பொருளாளர் ஸ்டார் ஜி உட்பட மருத்துவர் ஆனையூர் பகுதி சமுதாய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்