நேற்று மது பிரியர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைப்பதும்.
அதேபோல் குடித்துவிட்டு சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் முன்பு உள்ள சாலையில் மது பிரியர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் அங்கு வாகனங்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சாலை தடுப்பு மீது (பேரிகார்டு) ஏறி நின்று சாலையில் செல்பவர்களை வசை பாடுவதுடன் அட்ராசிட்டியில் .ஈடுபட்டார்.
தொடர்ந்து கையில் இருப்பு வைத்திருந்த (சரக்கு) மது பாட்டிலை எடுத்து பேரி கார்டு மீது வைத்து தனக்குத் தானே பேசியபடி ஸ்டைல் ஆக மது பாட்டிலை கையில் எடுத்து மிக்ஸிங் எதுவும் இல்லாமல் ராவாக லபக் என்று வாயில் ஊற்றினார்.
குடித்து மது பாட்டிலை மீண்டும் அதே இடத்தில் வைத்து கையில் இருந்த மூடியை ரஜினி ஸ்டைலில் தூக்கி வீசினார் .

மதுபிரியரின் இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
.
மது பிரியரின் பொது இடத்தில் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.