தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி என்பதின் அடையாளமாக குமரி மாவட்டத்தின் எட்டு திக்குகளில் எங்கு பார்த்தாலும்
தொடக்கப் பள்ளியோடு,உயர்நிலை பள்ளிகள் அடுத்து ஒரு கல்லூரி என்பது குமரி மாவட்டம் எங்கும் கண்களால் காணக்கூடிய காட்சி ஆகும்.

நாகர்கோவிலை அடுத்துள்ள நாகர்கோவில் உடையன் குடியிருப்பு பகுதியில்
உள்ள ஒரு கல்வி கோவில் சிவந்தி ஆதித்தனார் கலை கல்லூரி ஆகும்.
அண்மையில் இந்த கல்லூரியில் நிர்வாகிகள் சம்பந்தமாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புது அணியின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் பி.டி.செல்லகுமார் மற்றும் பல்வேறு பொறுப்பான பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குழுவினர்களது முதல் முயற்சியாக கல்லூரியின் தரம் உயர்த்த எடுத்த நடவடிக்கைகளில் முதன்மையாக நிதி திரட்டுவதற்க்காக,

வானத்தில் மட்டுமே மின்னும் ஏராளமான நட்சத்திரங்களை போன்று தமிழ் திரை நட்சத்திரங்களை பெரும் கூட்டமாக நட்சத்திர இரவு கலை விழா நிகழ்வில் மின்ன வைத்தப் பெருமைக்குரியவர். திரைப்படத்துறையில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற
பி.டி.செல்லக்குமார் ,கல்லிரியின் செயலாளர் என்ற நிலையில் பெரும் நட்சத்திரங்கள் படையையே கூட்டி வந்துவிட்டாரோ என திடல் நிறம்ப கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் கை ஒலி எழுப்பி ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன மகேஷ் நட்சத்திர இரவு கலை விழாவை வாழ்த்தி தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், மாநகராட்சி உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் நிகழ்வுகளாக நட்சத்திரங்கள் பங்கேற்ற பாடல் ,ஆடல் என பல்கலை நிகழ்ச்சிகள் கண்டு பார்வையாளர்கள் குதுகளித்தார்கள்.

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் விழாவின் இடையே மேடை ஏரி அவருரம் ஒரு திரை நட்ச்சத்திரம் தான் என்று அவரது அணுகுமுறை, பேச்சு இவற்றால் நிருபித்து விட்டார்.

நட்சத்திரங்களுடன் பங்கேற்ற இயக்குநர்களில் பாக்கியராஜ் ஒரு தனித்த நட்சத்திரமாக மின்னினார். இவரை போன்றே விஷால்,நடிகை ரோகிணி பார்வையாளர்களை அதிகமாக ஈர்த்தார்கள்.
சிவந்தி ஆதித்தனார் கலை கல்லூரி நிதி திரட்டும் பணியில் ஊரே கூடி உதவியதை விழா திடல் நிரம்பிய மக்கள் கூட்டமே சாட்சி.

விழாவில், நலிந்த ஆட்டோ ஓட்டுனர் 5 பேருக்கு உதவும் விதமாக
சிவந்தி ஆதித்தனார் கலை கல்லூரி சார்பில் நடிகர் விஷால் ஆட்டோக்களை வழங்கினார்.

குமரிக்கு மழை குறித்து ஆரஞ்சு அறிவிப்பு இருந்த நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மழை துளிகளை தூவி வாழ்த்தி கடந்து போனது. நிகழ்ச்சி முடியும் வரை ஒரு துளி மழை கூட வராதது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது.