• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு சிகிச்சைகள்..,

BySeenu

May 26, 2025

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் கௌதமன்ஸ் பிரீத் வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் பல்வேறு விதமான சுவாச பிரச்னைகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு மகாராணி அவென்யூ ஜங்ஷன் மருதப்ப முதலியார் வளாகம் முதல் தளத்தில் ப்ரீத் வெல் கிளினிக் தனது இரண்டாவது மையத்தை துவங்கியது.

ப்ரீத்வெல் கிளினிக் மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த சிறப்பு மருத்துவ குழுவினர் மருத்துவர்கள் கௌதமன்,பவித்ரா மோனி,ராஜ ஸ்ரீ,சரண்யா மோனி,சுபஸ்ரீ,ஸ்ருதி சின்னதுரை,தினேஷ் பெரியசாமி,ஆகியோர் கூறுகையில்,புதிதாக துவங்கப்பட்ட ப்ரீத்வெல் கிளினிக் சென்டரில்,ஆஸ்துமா,நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கம் தொடர்பான பிரச்னைகள்,குறட்டை விடுதல், அதனால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு,காசநொய்,நுரையூரல் புற்றுநோய் என நுரையீரல் ,காது,மூக்கு,தொண்டை,பல் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் இங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.