கன்னியாகுமரியில் கவிமணி தேசிய விநாயகம் பெயரால் ஆன பேருந்து வளாகத்தில் அலங்கார ஓடுகள் போடப்பட்டது.

நிலைய வளாகத்தில் ரூ. 3.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நடைபாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி அரசு பணிமனை துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் இதனை திறந்து வைத்தார். மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன்பதி என்.வி.முரளி தனது சொந்த செலவில் இந்த அலங்கார நடைபாதையை அமைத்து கொடுத்துள்ளார்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலர் பா.பாபு தலைமை வகித்தார். இதில், கன்னியாகுமரி நகராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் அருண்காந்த், நகராட்சி கவுன்சிலர் சுஜா அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், மாவட்ட திமுக அணிகளின் துணை அமைப்பாளர்கள் எஸ்.அன்பழகன், நிசார், ஜேன்சன் ரோச், தமிழன் ஜானி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரை பிரதாப், திமுக ஒன்றிய துணை செயலாளர் பிரேமலதா, அஞ்சுகிராமம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீடியோ குமார், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் ஷ்யாம், திமுக வட்டச் செயலர் ரூபின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
