• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி..,

ByAnandakumar

May 17, 2025

கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாங்கல் போலீசார் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், உயிரிழந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.