இந்த அரசியல் கட்சி அதை செய்தது அந்த அரசியல் கட்சி இதை செய்தது என்று யாருமே வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக முதலில் புகார் தந்த – வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்
பாதிக்கப்பட்ட பெண்னை ரகசிய முறையில் கூட இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் சந்திக்கவில்லை. இந்த வெற்றி முதன் முதலாக வெளியில் வந்து புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே சேரும். வேறு எந்த அரசியல் கட்சிகளும் இதை சொந்தம் கொண்டாட முடியாது – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலில் புகார் கொடுத்த வழக்கறிஞர் பேட்டி !!!
ஆரம்பத்தில் இதில் என்ன குழப்பம் வந்தது, அது என்னவென்றால் மொத்தம் பாலியல் வழக்கு ஒன்று, அதைத் தொடர்ந்து அடி, தடி வழக்கு வந்து வந்தது. அந்த வழக்கின் ஜாமினில் வெளியே வந்தது தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.
இந்த பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளி வந்து விட்டதாக ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. வன்கொடுமையில் புகார் கொடுத்த சகோதரனையும், பெண்ணையும் குற்றவாளி அடித்ததற்கான வழக்கு தான் இருந்தது. நீங்கள் எப்படி ? புகார் கொடுக்கலாம் என ஆரம்பித்த பிரச்சனை தான் இவ்வளவுக்கும் காரணம். அடி, தடி வழக்கில் தான் முதலில் அந்த நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அடையாளம் காணப்பட்டு பின்னர் பெயிலில் வெளியே வந்தார்கள். மொத்தமாக இன்று எட்டு புகார்கள் சேர்ந்து விசாரிக்கப்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்டு இருக்கிற பெண்கள் புகார் கொடுக்க முன் வர வேண்டும் என சொல்லி, அதன் பிறகு ஒன்றாக விசாரித்து, தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது, நாம் இந்த பலத்தை கொண்டு வந்த சகோதரிக்கு மட்டுமே மொத்த வெற்றியும் சேரும்.
இந்த அரசியல் கட்சி அதை செய்தது அந்த அரசியல் கட்சி இதை செய்தது என்று யாருமே வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது.

இதையெல்லாம் தாண்டி இன்று ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயம் நன்றி சொல்ல வேண்டியது, முதல் முதலாக புகார் கொடுக்க வந்த சகோதரிக்கு தான் நன்றியை உரித்தாக்க வேண்டும். ஆனால் இன்று வெற்றியை சொந்தம் கொண்டாடும் அரசியல் கட்சிகள் ஒரு முறை கூட இதுவரை பாதிக்கப்பட்ட அந்த முதல் புகார் கொடுத்த பெண்ணை பார்த்து ஆறுதல் தெரிவித்தது கிடையாது.
இவ்வளவு பரபரப்பான வழக்கை ஒரு பெண் தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கிறார் என்றார், அரசியல் ஆதாயம் அடைந்த நபர்கள் கூட, இதுவரை அந்தப் பெண்ணை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. சட்டப்படி போராடி அந்தப் பெண் இன்று வெற்றி பெற்றிருக்கிறார். அப்படி பாதிக்கப்பட்ட சகோதரியின் வெற்றியை யாரும் இன்று சொந்தம் கொண்டாடக் கூடாது. இந்த வெற்றியை முழுமையாக ஒருவருக்கு தான் சேரும். அவர்களுடைய தைரியமான மன நிலை, 2019 ல் தமிழக முழுவதும் பற்றி எரிந்த ஒரு வழக்காக தான் இது இருந்தது.
கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போதே, தைரியமாக வந்து புகார் கொடுத்தார். எந்த அரசியல் கட்சியினும் முயற்சியிலும் வெற்றி பெறவில்லை. குற்றம் சாட்டப்பட்டு உள்ள ஒன்பது பேரில், நான்கு பேர் மூன்று கட்சியை சேர்ந்தவர்கள். அருளானந்தம் அண்ணா தி.மு.க வில் இருந்தார். திருநாவுக்கரசு காங்கிரஸ் கட்சியினுடைய மிக தீவிரமான ஒரு தொண்டர். பாபு தி.மு.க வை சேர்ந்தவர். குற்றவாளிகளை இப்போது கட்சியை சார்ந்து வகைப்படுத்தக் கூடாது. இவர்கள் அனைவருமே மனித மிருகங்கள்.
ஒரே ஒரு குற்றவாளியின் பெயர் மட்டும் தான் கட்சி சார்ந்து கூறப்படுகிறது, கட்சியை சார்ந்து அவர்களை விளம்பரப்படுத்தாதீர்கள். மொத்தம் மூன்று கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அனைவருமே ஏதாவது ஒரு கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அதை வைத்து யாரையும் அடையாளப்படுத்த வேண்டாம். சொல்லப் போனால் இன்று நீதிதான் ஜெயித்து இருக்கிறது. அன்னைக்கு போராடிய மகளிர் சங்கங்கள் கூட பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை என்பது தான் எங்களுடைய வருத்தம் என வழக்கறிஞர் கூறினார்.





