தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்பறைகள் போன்று பத்தாம் வகுப்பு தனித்தனி வகுப்பறைகளாக கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அரங்குகளில் அப்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

50 ஆண்டுகள் பிறகு படித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தங்களது குடும்பத்தினரிடமும் அறிமுகம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய ராணுவத்தை பாராட்டும் விதமாக அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆதரவு அளித்தனர்.
சிறுவர் ,சிறுமிகளுக்கான, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு படித்தபோது ஆடிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் காக்கி பேண்ட்,வெள்ளை சட்டை அணிந்து பள்ளி மாணவர்கள் போன்று தோற்றம் அளித்தனர். மறைந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
வருகை தந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்கள். நிகழ்ச்சி காலை 8:00 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சங்க விழா அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.