அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் நலத்துடன் வாழ வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அந்தவகையில் பழனி முருகன் கோவிலில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு தலைமையில், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் ரவிமனோகரன், நகர கழக செயலாளர் முருகானந்தம், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் பண்ணாடி ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்கரதம் இழுத்து வழிபட்டனர். முன்னதாக பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தினர்.