கோவை, வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு . மோப்பநாய் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரப் பகுதியில், திருப்பூர் ஈரோடு சேலம் போன்ற வெளியூர் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என ஐந்து பேருந்து நிலையங்கள் உள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள காலி இடம் உள்ளது. அங்கு இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் நடைப் பயிற்சி பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நடைப் பயிற்சி சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. அடுத்து அங்கு சென்று பார்த்த போது கைகள் கட்டிய நிலையில் ஆண் பிணம் இருந்தது. இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் இருந்தது என்றும், அவரது உடலை மீட்ட காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோப்பநாய் உதவியுடன் அங்கு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நபர் யார் ? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? அல்லது என்ன காரணம் ? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.