நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி கிராமம் காவிரி கரை மீதுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமரகதவள்ளி சமேத அருள்மிகு முக்கண்ணீஸ்வர்சிவ ஆலயத்தில் சித்திரைமாத வளர்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு இன்று மூலவர் மற்றும் நந்திபகவானுக்கும் பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் பச்சரிசி மாவு கரைசல் மஞ்சள் சந்தனம் வீபூதி சொர்ணம் என 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது விநாயகர் மூலவர் முக்கண்ணீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ முத்து மரகதவள்ளி சுவாமிக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளாமான பகதர்கள் தரிசணம் பெற்று சென்றனர்.