• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வசூலைக் குவித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’

Byவிஷா

May 8, 2025

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருவதுடன், 7 நாளில் ரூ.27 கோடி வசூலாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களின் மத்தியில் வரவேற்பையும் பெற்று வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியானது முதல் 7 நாள் முடிவில் ரூ.27 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு தற்போது அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.