• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 4 ஆக உயர்வு

Byமதி

Dec 5, 2021

உலகம் முழுவதும் ஒமைக்ரான் 40 நாடுகளில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு நேற்று ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை அருகே உள்ள கல்யாண்-டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த அந்த நபருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த 35 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை கூறி உள்ளது.