கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது.

தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தங்கரத்தினம் (வயது 26) கவுண்டப்பட்டி, தொண்டமாங்கினம், கடவூர் மற்றும் ஜெயசூர்யா (வயது 20) சங்கி பூசாரியூர், மைலம்பட்டி, கடவூர், பகுதியை சார்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், அவர்கள் உத்தரவின் படி, இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
