கரூரில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தான் மக்கள் தங்கி இருந்தால் அவர்களை உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மனு அளித்தனர்.

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22,2025 அன்று .பாகிஸ்தான் அரசால் ஆதரிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், 26 அப்பாவி பொதுமக்களின் உயிரைப்பறித்தது சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்தல் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டிலிருந்து அவர்களை நாடு கடத்தத் தொடங்குதல் போன்ற பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வரும் நிலையில்,
காலாவதியான விசாக்கள் வைத்திருப்பவர்கள் அல்லது விசாக்கள் இடைநிறுத்தப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களையும், அடையாளம் கண்டு, அத்தகைய நபர்களின் விவரங்களை தாமதமின்றி பட்டியலிட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மனுவை உடனடியாக கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.