• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காலத்தோடு பயணம் செய்யுங்கள்.

Byவிஷா

May 6, 2025

பெரும்பாலான மனிதர்கள் பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த மட்டுமே வாழ்கின்றனர்.
உண்மையில் அவர்கள் தங்களுக்குள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
ஏனெனில்,தாழ்வுணர்வில் தவிக்கும் மக்கள் மட்டுமே அடுத்தவர்களைக் கவர நினைக்கிறார்கள். உண்மையில் மேலான மனிதர்கள் ஒருபோதும் தன்னை எவருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதே, இல்லை.
யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.
நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை
அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவது இல்லை.
கையில் ஆயுதங்களை வைத்துத் திருடுபவர்களை விட, வெகுளித்தனமாகவும், அப்பாவி போல நடித்து அதிகமாக மனிதர்களிடம் திருடுகின்றவர்களே இங்கு அதிகம்.
முழுக் கதையையும் அறியாமல் ஒருவரை ஒருபோதும் மதிப்பிடாதீர்கள்.
கதை உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மை என்னவென்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.
புதையும் விதைக்குத் தெரியாது உயிராய் எழுந்து நிற்போம் என்று, எரியும் தீக்கு தெரியாது இருளை போக்குவோம் என்று. நம்மை ஏமாற்றுபவருக்குத் தெரியாது நாளை நாம் ஏமாற்றுப்படுவோம் என்று.
கசந்தாலும் மருந்தாக சிலர் மட்டும் இருந்தாலும், இனித்தாலும் விஷமாகத்தான் பலர் உலாவி வருகிறார்கள், கவனமாக இருங்கள்.
எதையும் அதிகமாகச் சிந்திக்காதீர்கள்; சில நேரங்களில், உங்கள் அதிகமான சிந்தனையே, உங்கள் பிரச்சனையாக மாறலாம்.! நம் வாழ்வில், நமக்கு எது கிடைத்தாலும், எது கிடைக்காவிட்டாலும் அதற்கு நிச்சயம் ஒரு நல்ல காரணம் இருக்கும்… காலத்தோடு பயணம் செய்யுங்கள்; அதற்கு, பேசும் சக்தி கிடையாது. ஆனால், நம் கேள்விகள் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு நாள் நமக்குப் பதில் சொல்லும்.
முடிவுகள் யாரோ ஒருவரால் எழுதபட்டவை அல்ல.
அது நம்மால் எழுதபடவேண்டியவை.
உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு…..
தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்
புறம் பேசுபவர்களைப் புறக்கணித்து விடுங்கள், புகழ்பவரிடம் பார்த்துப் பழகுங்கள்.
ஏனெனில், வீழ்த்தவே முடியாது என்ற நிலையில்,
வீழ்த்த நினைப்பவர் எடுக்கும் முதல் ஆயுதமே புகழ்ச்சி தான்.
பின்னால் நின்று புறம் பேசுபவர்கள் அவர் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வதில்லை.
நீங்கள் எவ்வாறு பேசக் கற்றுக்கொண்டீர்களோ. அதே போல் மௌனத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.
பேச்சு உங்களுக்கு வழி காட்டலாம் ஆனால், மௌனம் நிறைய சந்தர்ப்பங்களில் உங்களைப் பாதுகாக்கும்.