• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பாஜக நிர்வாகிகள் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்கள்…

BySeenu

May 5, 2025

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியாது என்று திமுக தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்வது போல, காஷ்மீரிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் இந்துக்களை குறி வைத்து, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், 26 பேர் பலியானதை கண்டித்தும் பாஜக கோவை சுந்தராபுரம் பகுதியில் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகி வசந்த ராஜன்..,

காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி 370 ஆர்டிகல் ரத்து செய்ததில், காஷ்மீரின் பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார். மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் சுற்றுலா காஷ்மீர் வந்து செல்வதனால் காஷ்மீரில் பொருளாதாரம் அதிகரித்துள்ளது.

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ முடியாது என்று திமுக தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்வது போல, காஷ்மீரிலும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காஷ்மீரில் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில், பாகிஸ்தான் இதுபோல கொடுமையான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது என குற்றம் சாட்டினர்.

பாகிஸ்தானியர்கள் கள்ளத்தனமாக விசா வாங்கி கொண்டு, இந்தியாவில் வாழ்ந்து வருவதை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேச விரோத செயலில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டித்தும், இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.