விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா செவலூரில் வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் நிர்வாகிகள் வழங்கி கும்பாபிஷே நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்டு கோவில் திருப்பணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராகு கேது, விநாயகர், சர்ப்ப கிருஷ்ணர், பெருமாள் ,உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொண்டு கும்பாபிஷேக பணிக்கு ரூபாய் 50,000 நன்கொடை வழங்கினார்.