• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்தார் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சாத்தூர் துணை மின் நிலைய கோட்ட அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்து ரூ.16 லட்சத்து 70 மதிப்பில் கடன்களை 6 மகளிருக்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் மேட்டமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து பல்வேறு கடன்திட்டங்கள் மூலம் ரூ.16 லட்சத்து 70 மதிப்பிலான கடன்களை தொகைகளை 6 மகளிருக்கு வழங்கினார். நிகழ்ச்சில் அமைச்சர் தெரிவிக்கையில் தமிழகத்தில் வசிக்க கூடிய பொதுமக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில், மின்சாரத்துறையின் நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான, தங்கு தடையின்றி மின்சார சேவைகளை வழங்கும் விதமாக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை உருவாக்கி அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், புதியதாக உதயமாகியுள்ள புதிய சாத்தூர் மின் பகிர்மான கோட்டத்தின் கீழ் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட பிரிவு அலுவலகங்கள், N.சுப்பையாபுரம், உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட N.சுப்பையாபுரம் மற்றும் ஏழாயிரம்பண்ணை ஆகிய பிரிவு அலுவலங்கள், ஆலங்குளம் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட ஆலங்குளம், கீழராஜகுலராமன், கல்லம நாயக்கன்பட்டி ஆகிய பிரிவு அலுவலங்கள், ஊரகம்/சிவகாசி உபகோட்டத்திற்குட்பட்ட வெம்பக்கோட்டை பிரிவு அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் இராஜபாளையம் உபகோட்டத்திற்குட்பட்ட ஆசிலாபுரம் பிரிவு அலுவலகம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்படி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் தொடர்பான செயற்பொறியாளர் அலுவலக பணிகளுக்கு புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு அமைச்சர் தெரிவித்தார்.