விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றதாக தெரிய வருகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றினுள் மகேஸ்வரி தவறி விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது கணவர் ராஜா வயது 38 மற்றும் அவரது தாயார் ராசம்மாள் வயது 50 இருவரும் ஓடி சென்று கிணற்றில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நீரில் குத்த்த இருவரும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் மகேஸ்வரியை மட்டும் பத்திரமாக மீட்ட மீட்பு பணி வீரர்கள் அவரின் கணவர் ராஜா மற்றும் தாயார் ராசம்மாள் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் துணி துவைக்க சென்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர் மற்றும் தாயார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.