கோவை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் சிங்காநல்லூர் பகுதியில் நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் எம்.எஸ் முருகராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

மேலும் ஏராளமான பொதுமக்கள் வந்து நீர்மோர் மற்றும் தர்பூசனி பழங்களை வாங்கிசென்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் பொன்னுராஜ்,மாவட்ட துணை செயலாளர் எஸ்.எஸ். கோவிந்தராஜ்,செயற்க்குழு உறுப்பினர் கருப்புதுரை,பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் நீ.நா.வேலுச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன்,குனியமுத்தூர் கேப்டன் மன்ற செயலாளர் இப்ராகிம், மற்றும் சிங்கை குணா,கழக பேச்சாளர் ரியல் ஆசான்,தேவி சந்துரு,திலகவதி, வசந்தகுமாரி உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.