ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற அறிவிப்பு அளவிட முடியாத பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே மந்திரம் தான். படித்தால் முன்னேறுவோம் என்ற மந்திரம் அனைவருக்கும் தெரிந்த மந்திரம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது.

அதிகாரத்தை கையில் வைத்திருந்த சாதியினரிடமிருந்து அதிகாரம் பல்வேறு சாதியினரிடம் பரவலாக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் விரும்பவில்லை அதனால் ஒரே உயர்ந்த ஜாதியினரிடம் அதிகாரத்தைக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் மூணாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பில் மாணவர்களை ஃபெயிலாக்கும் முயற்சி.
ஒரு படம் எடுத்துவிட்டால் ஹீரோவும் வில்லனும் தான் ஹீரோ திமுக வில்லன் அதிமுக அவ்வளவுதான் குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள் அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை…புதுக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா பேட்டி
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என்பது பீகார் தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரக்கூடிய தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பாக தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு அறிவிப்பாகத்தான் வந்திருக்கிறது தவிர இதற்கென்று ஒரு நிதி என்பது ஒதுக்கப்படவில்லை. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அந்த அறிவிப்பு முழுமை பெறும். அதனால் சாதி வெறி கணக்கெடுப்பிற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று எங்கேயும் சொல்லவில்லை. எத்தனை காலத்திற்குள் இது முடிக்கப்படும் என்றும் கூறவில்லை. இப்படி எல்லாம் வரையறை செய்யாமல் வெற்று அறிவிப்பாக மட்டுமே ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது இது நடக்குதா என்று பார்ப்போம்.
ஒரு படம் எடுத்துவிட்டால் ஹீரோவும் வில்லனும் தான் ஹீரோ திமுக வில்லன் அதிமுக அவ்வளவுதான் குணச்சித்திர நடிகர்கள் குறுக்க மறுக்கா வந்து செல்வார்கள் அதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற அறிவிப்பு அளவிட முடியாத பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். இடைநிற்றலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 9ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி அடைய வையுங்கள் என்று கூறினால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த படிப்பை வைத்து தான் பல்வேறு துறைகளிலும் அயல்நாட்டுகளிலும் வேலைக்கு சென்றுள்ளோம்.
ஒரு குழந்தையை வளரும் பருவத்தில் மூன்றாம் வகுப்பிலேயே நீ எதற்கும் லாயக்கு இல்லை என்று சொல்லி ஃபெயில் செய்தால் அந்த குழந்தைக்கு எப்படி படிக்கும் எண்ணம் வரும் படிக்க வைக்கக்கூடிய எண்ணம் எப்படி பெற்றோருக்கு வரும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே மந்திரம் தான். படித்தால் முன்னேறுவோம் என்ற மந்திரம் அனைவருக்கும் தெரிந்த மந்திரம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளது. இன்று சிபிஎஸ்இ க்கு அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே நீட் சில மாநிலங்களுக்கு என்று அறிவித்துவிட்டு பின்னர் இந்தியா முழுவதும் அதனை கொண்டு வந்துள்ளனர். அதிகார பலம் அவர்கள் கையில் இருப்பதால் ஜாதியை காரணம் காட்டி கூட உயர்ஜாதி இல்லை என்று கூறி அவர்கள் மூன்றாம் வகுப்பிலேயே ஒரு குழந்தையை ஃபெயில் ஆக்கலாம். அப்படி ஃபெயில் செய்தால் அந்த குழந்தை தேநீர் கடையில் சென்று நிற்கக்கூடிய நிலையும் ஏற்படும். அதிகாரத்தை கையில் வைத்திருந்த சாதியினரிடமிருந்து அதிகாரம் பல்வேறு சாதியினரிடம் பரவலாக்கப்பட்டுள்ளது.
அதை அவர்கள் விரும்பவில்லை அதனால் ஒரே உயர்ந்த ஜாதியினரிடம் அதிகாரத்தைக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பில் மாணவர்களை ஃபெயிலாக்கும் முயற்சி.
2021ல் தமிழ்நாடு முதலமைச்சர் எப்படி வெற்றி பெற்றாரோ அதைவிட பிரம்மாண்ட வெற்றியை 2026 இல் பெறுவார். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்க தான் செய்வார்கள் மக்களுக்கு எது உண்மை பொய் என்று தெரியும்.
மதுரை ஆதீனம் வைத்த குற்றச்சாட்டிற்கு எஸ் பி விளக்கம் கொடுத்துள்ளார். ஒரு எஸ்பி ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார். காவல்துறை எப்போதும் தகுந்த ஆதாரத்தை கையில் வைத்து தான் சொல்வார்கள் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் அது தமிழ்நாட்டு வரலாறு எடுத்து பார்த்தால் தெரியும். அதனால் அவர்களிடம் 100% ஆதாரம் இருக்கும் இதை வைத்து யார் பேச்சை கேட்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.